எல்லா புகழும் இறைவனுக்கே !!!
Sathya !!!: இந்தியா வரலாறு காணாத 2ஜி உழல் !!!!!!!!!! இந்தியா வரலாறு காணாத 2ஜி உழல் !!!!!!!!!! | Sathya !!!

என்னைப் பற்றி

எனது படம்
India
Hi I am sathyanarayanan,i like Read books and post a social & general news's , ,,,,,,

சனி, 20 நவம்பர், 2010

இந்தியா வரலாறு காணாத 2ஜி உழல் !!!!!!!!!!

இந்தியாவில் லஞ்சம் நாளுக்கு நாள் வளருதே தவிர குறையார மாதிரி தெரியல .....
என்ன இப்போ வரலாறு  காணாத உழல்அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரம் பற்றி  செய்திதாளில் வந்தவண்ணம் உள்ளது நான்  படித்ததை இந்தபதிவின் முலம் உங்களுடன் பகிர்கிறேன்,,,,,

ஓனே  இந்திய (oneindia):
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்தியா இதுவரை காணாத பெரும் தொகை இழக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களைத் திருப்திப்படுத்த தேசத்துக்கு நஷ்டம் விளைவிக்கும் அளவுக்கு துணிந்திருக்கிறார்கள் அதிகாரத்திலுள்ளோர். 'வெள்ளையர் காலத்திலும் நடந்திராத கொள்ளையாக அல்லவா இருக்கிறது' என நடுநிலையாளர்கள் மனம் கொதித்துப் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 ஜி விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்டும் வகையில், குறைவான தொகைக்கு உரிமம் பெற்ற அத்தனை நிறுவனங்களிடமும், இன்றைய மார்க்கெட் ரேட்டை வசூலிக்க அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

ஒரு வேளை இது நடந்தால், பலரும் கவனிக்காமல் விட்ட ஒரு கேள்வி விசுவரூபம் எடுக்கும்.

அது... இந்த 2 ஜி உரிமத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கொடுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்!

அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி லஞ்சப் பணம்!!

இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் எப்படி திருப்பி வசூலிக்கப் போகின்றன? துறைக்குப் பொறுப்பானவர்கள், ஒதுக்கீடு செய்தவர்களின் சட்டையைப் பிடித்து திரும்ப எடுத்து வையுங்கள் அந்தப் பணத்தை என்று கூற முடியுமா...

இதனை எப்படி வெளிக் கொண்டுவர முடியும்? என்ற கேள்வி எழலாம். அரசு மனது வைத்து நேர்மையான விசாரணையை மேற்கொண்டால், வெளிக்கொணர முடியும். ஒரு வகையில் இந்தப் பணம் மொத்தமும் கணக்கில் வராத கறுப்புப் பணம். நியாயமாக அரசுக்கு சேர வேண்டிய பணம். அதை எப்போது அரசு கையகப்படுத்தப் போகிறது?

விசாரணை என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி, இந்த லஞ்சப் பண விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், இந்தத் தனியார் நிறுவனங்கள் திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வாய் மூடி மவுனம் சாதித்து, பொருத்தமான தருணத்தில் மீண்டும் காரியம் சாதித்துக் கொள்ளப் போகும் அபாயமும் இதில் உள்ளது!

எனவே இந்த ஊழல் முன்னிலும் பல மடங்கு அதிகமாக நடக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தவறு செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதோடு, இந்த தவறைச் செய்ய கைமாறிய பெரும் தொகையைக் கண்டுபிடித்து வெளிக் கொணர்வதும் அவசியம். 

தினமலர் (dinamalar) :
             அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக
ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாக வெடித்து, அதையொட்டி பல்வேறு பிரச்னைகள் கிளைவிடத்துவங்கியுள்ளன. ஆனால், இந்த விவகாரம் துவங்கியதில் இருந்து, பார்லிமென்டை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரின் பணிகள் அனைத்துமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது. ராஜா ராஜினாமாவை அடுத்து, கூட்டுக் குழு விசாரணை தேவை என்று கூறி, எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த முட்டுக்கட்டையை நீக்கவும், சுமுகமான முறையில் பார்லிமென்டை நடத்துவதற்காகவும், எதிர்க்கட்சிகளுடன் அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். நேற்று காலை பார்லிமென்ட் கூடியதும் இரு அவைகளும் சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. எங்களுக்கு தேவை, ஜெ.பி.சி., தான் என்று அந்த ஒரு வார்த்தையை முழங்கி வருகின்றனர். பதிலுக்கு மத்திய அரசோ, முதலில் "பிஏசி' அப்புறம் பார்ப்போம் என்கிறது. இப்படி விட்டேனா பார் என இருதரப்பும் இருப்பதால் ஆறு நாளாக பார்லிமென்ட் முடங்கிவிட்டது.

எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தை உணர்ந்த அரசு தரப்பு, அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்," பார்லிமென்டின் கூட்டுக்குழுவை அமைக்க தயார், அப்படி அமைக்கும் பட்சத்தில் 1998ம் ஆண்டிலிருந்தே விசாரணையை நடத்த வேண்டும், சம்மதமா' என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு, காரணம் ஏலம் விடுவதை தவிர்த்து விட்டு, வருமான பங்கீட்டு அடிப்படை முறையை அறிமுகப்படுத்தியதே பா.ஜ.,தான் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காகவே அப்போதைய அமைச்சர் ஜக்மோகனை பதவியில் இருந்து விலகச் செய்ததும் பா.ஜ.,தான் என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. இதனால், பார்லி., கூட்டுக்குழு அமைப்பது குறித்து இரு தரப்புக்கும் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இதற்கிடையில், வரும் திங்கள் அல்லது செவ்வாய் அன்று சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரும்போது, நீதிபதிகள் ஏதேனும் கருத்துக்கள் தெரிவித்தால், எதிர்க்கட்சிகளின் குரல் மீண்டும் வலுவாக கிளம்பவும் வாய்ப்புள்ளது. இருதரப்புக்கும் இடையில் விடை தெரியாத புதிர் போல் நீண்டு கொண்டு போனால், பார்லி.,யின் குளிர்கால கூட்டத்தொடர் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில், நேற்று நிருபர்களை சந்தித்த அமைச்சர்கள் நாராயணசாமியும், ஷிண்டேயும், பார்லி., நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து நீடித்து வரும்  முட்டுக்கட்டைக்கு வரும் திங்கட்கிழமைக்குள் ஒரு முடிவு தெரிந்து விடும், என்று தெரிவித்தனர்.
 இன்று தினமணி யில் :
2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில், தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள் என்றார் பிரதமர். பாராளுமன்றம் கடந்த ஆறு நாட்களாக செயல்படாமல் முடங்கிய நிலையில், தனது நீண்ட நாள் மவுனத்தைக் கலைத்துவிட்டு, இன்று அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் வழக்கம்போல் சுமுகமாக இயங்குவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், எந்த விவகாரத்தையும் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், எதற்கும் பயப்படவில்லை என்றும் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார். கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பாராளுமன்றமும் நாடும் கொந்தளிப்பான சூழ்நிலையில் இருக்கும் நிலையில், முதல் முறையாக பிரதமர் மன்மோகன் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தவறாக நடந்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் நீதிக்கு முன் நிறுத்தப் படுவார்கள். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உழல் எங்குபோய் முடியுமுன்னு யாருக்கு  தெரியும் மொத்தத்தில் உழல் என்று ஒழியுமோ அன்றுதான் இந்தியா வல்லரசு  ஆகும்  ,,,,,,,,,,,

கருத்துகள் இல்லை:

Click Ads,,,