எல்லா புகழும் இறைவனுக்கே !!!
Sathya !!!: காய்கறிகள் மற்றும் பழங்களில் விஷத்தன்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது காய்கறிகள் மற்றும் பழங்களில் விஷத்தன்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது | Sathya !!!

என்னைப் பற்றி

எனது படம்
India
Hi I am sathyanarayanan,i like Read books and post a social & general news's , ,,,,,,

சனி, 13 நவம்பர், 2010

காய்கறிகள் மற்றும் பழங்களில் விஷத்தன்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது

காய்கறிகள் மற்றும் பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது ,இந்தியாவில் விவசாய நிலங்களில் அதிக அளவில் ரசாயன உரங்கள் பயன் படுத்துகின்றனர் இதுவே காரணம் என்கிறது ஆய்வு ,,,,,
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ரசாயன உரங்களை இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், காய்கறிகள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. தக்காளி, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, சுரைக்காய், முட்டை கோஸ், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளும், சில வகை பழங்களும் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்கிறார்கல்  ,,,
ஐரோப்பிய நாடுகளில் விளையும் காய்கறிகள் , பழங்களில் உள்ள விஷத்தன்மைவிட, 750 மடங்கு அதிகமாக இந்திய காய்கறிகள் & பழங்களில் உள்ளது.இந்த நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது, நரம்பு தொடர்பான நோய்கள், தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.இது பற்றி டில்லியில் உள்ள "நுகர்வோர் குரல்' தன்னார்வ அமைப்பு டில்லி, பெங்களூரு , கோல்கட்டா ஆகிய நகரங்களில் இருக்கும் சில்லறை மற்றும் மொத்த காய்கறி கடைகளில் விற்கப்படும் காய்கறிகளை ஆய்வு செய்தது,ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், இந்தியாவில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக விஷத்தன்மை கொண்டதாக மாறிவருவது தெரியவந்துள்ளது
ஆய்வுக் குழுவை சேர்ந்த சிஷர் கோஷ் கூறினார் ,,
அதுமட்டும் இன்றி மேலும் அவர் கூறியது பின்வருமாறு :
 இதவகை காய்கறிகளும் & பழங்களும் அதை உண்பவர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது .  தடை செய்யப்பட்ட உரங்களை பயன்படுத்தை தடுக்க, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்பட வேண்டும் என்று சிசர் கோஷ் கூறினார். 

கருத்துகள் இல்லை:

Click Ads,,,