ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 நாள்
இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை
நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.
உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் நாளை கொண்டாடுகின்றன.
ஆனால் இன்றைய குழந்தைகள் நிலை :
1) குழந்தைகள் தொழிலாளர்களாக தொடர்ந்து, நீடித்தப் பணியில்
குழந்தைகள் தொழிலாளர் ஈடுபடுவதைக் குறிக்கிறது. எல்லா நாடுகளிலும் சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பெரிய சர்வதேச நிறுவனங்களில் கூட இக்கொடுமை நடைபெறுகிறது. கஹதோதக் குழந்தைத் தொழிலாளர் பணியமர்த்தப்படுவது வரலாற்றுக் காலத்தில் கூறப்பட்டாலும், உலகளாவிய கல்வி முறை , தொழில்துறையில் ஏற்பட்ட வேலை மாற்றம், வேலையலர்களுகும் ,குழந்தைகளின் உரிமைகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துக்களால் குழந்தைத் தொழிலாளர் முறை தற்போது உலகெங்கும் பரவியுள்ளது.
வளர்ச்சியடைந்த பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளரின் வயது மாறுபட்டதாக உள்ளது. பள்ளி வேலை மற்றும் வீட்டு வேலை தவிர பிற வேலைகளுக்கு குழந்தைகள் பணியமர்த்தக்கூடாதென வளர்ச்சியடைந்த நாடுகள் கூறுகின்றன. குறிப்பிட்ட வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கண்டிப்பாக பணியமர்த்தக்கூடாது. இந்த குழந்தை தொழிலாளர் வயது வித்தியாசமும் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதுடன், பெற்றோரின் சம்மதமில்லாமல் வேலைக்கு அனுமதிக்கக்கூடாது என்பதாகும்.
2)
குழந்தை கொலைகள் :
மும்பாயில் தன் குழந்தை ஆஸ்பத்திரி மாடியில் இருந்து கிழ் போட அருமை தாய் ....
கோவையில் ஒருவன் இரு குழந்தைகளை கடத்தி கொன்றான் ( கிடைத்து அவனுக்கு ஆப்பு ),,,,,
படித்த இரு பட்டதாரிகள் பணத்திற்காக குழந்தை கடத்தி உள்ளனர் ,,,,,
இன்றும் இந்தியாவில் குழந்தை கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கு ....
இதுபோன்று பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளது இதற்கு என்ன தான் தீர்வு ,,,,,,,,,,,,
நான் தினமலர் படித்ததை இந்த பதிவுடன் பகிர்கிறேன் (நன்றி தினமலர்)செய்தி பின்வருமாறு :
குழந்தைகள் கொலை: எப்படி தண்டனை கொடுக்கலாம் ?
கோவை : "பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொலை செய்த டிரைவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்; அதற்கேற்ப இவ்வழக்கில் ஆஜராக சிறப்பு வக்கீல் நியமிக்கப்பட வேண்டும்' என கோவை வக்கீல்கள். கருத்து தெரிவித்துள்ளனர், குழந்தை கடத்தலில் ஈடுடும் குற்றவாளிகளை என்ன செய்ய வேண்டும் எப்படி தண்டனை வழங்க வேண்டும் என கருத்துக்கள் கேட்டு இன்று காலையில் தினமலரில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் குற்றவாளி மோகன்ராஜூவை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது மக்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. குற்றம் புரிந்தவர்கள் மீது எப்படி நடவடிக்கை இருக்கலாம் என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:
கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்; துணிக்கடை உரிமையாளர். கடந்த 29ம் தேதியன்று காலை, பள்ளி வேனுக்காக காத்திருந்த இவரது மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் வேனில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கால் டாக்சி டிரைவர் மோகன் ராஜூ, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த இவனது கூட்டாளி டிராக்டர் டிரைவர் மனோகரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இச்சூழலில், பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொலை செய்த கொடூர குற்றவாளிகளை விசாரணை இன்றி, பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது பற்றி கோவை வக்கீல்கள் சிலர் கூறிய கருத்துகள்:
வக்கீல் ராஜேந்திரன்: குழந்தைகள் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளிக்கு சொந்தமான பஸ்களில் அழைத்துச் செல்ல வேண்டும். முடிந்தவரை வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும்.பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேன், ஆட்டோ டிரைவர்களின் போட்டோவை பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசார் பெற வேண்டும். டிரைவர்கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.கோவையில் இரு குழந்தைகளை கடத்தி, கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை தனி கோர்ட்டில் விசாரிக்க வேண்டும். இதற்காக சிறப்பு அரசு வக்கீல் நியமிக்கப்பட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து, உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும். தனி கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றாலும், அங்கும் விரைந்து உறுதி செய்யப்பட வேண்டும்.
வக்கீல் கலைச்செல்வி: குழந்தை கடத்தல், கொலை சம்பவம் வன்மையாக கண்டிக்க வேண்டிய செயல். இச்சம்பவம் பற்றிய வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபட நினைப்போர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கடுமையான மரண தண்டனை விதிக்க வேண்டும். குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர் மறக்க முடியாத அளவுக்கு தண்டனை வழங்க, தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்.
வக்கீல் ஆனந்தன்: இச்சம்பம் பற்றி விசாரிக்கும் போலீசார், அனைத்து சாட்சிகளையும் உறுதியாக சேர்க்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது, எவ்வித தவறும் நடந்து விடக்கூடாது. வழக்கில் ஆஜராக சிறப்பு அரசு வக்கீல் நியமிக்கப்பட வேண்டும். வழக்கை நாள்தோறும் விசாரிக்கும் வகையில் தனி கோர்ட் அமைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். இவர்களுக்கு கிடைக்கும் தண்டனை, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இடையே தொடர்பு இருக்க வேண்டும். மாணவ, மாணவியரின் குடும்ப போட்டோ டிரைவர்களிடமும், டிரைவர்களின் போட்டோ பெற்றோர் மற்றும் குழந்தைகளிடமும் இருக்க வேண்டியது அவசியம்.
வக்கீல் தேன்மொழி: பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இச்சட்டத்தில் கடும் தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். கோவையில் நடந்த கொடூர சம்பவத்தில் நேரடி சாட்சியம் இல்லாத காரணத்தால், குற்றவாளிகள் இருவரிடம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டும். இதை வைத்தே அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வழக்கை மிக முக்கியமான வழக்காகக் கருதி, சிறப்பு நீதிமன்றத்தில் விரைந்து விசாரிக்க வேண்டும். ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்களில் மேல்முறையீடு செய்தாலும், கீழ் கோர்ட் விதிக்கும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும். அந்தளவுக்கு வழக்கின் குற்றப் பத்திரிகை நிச்சயிக்கப்பட வேண்டும்.
ஆனால் இதற்கிடையில் அன்று காலையில் குற்றவாளி மோகனராஜூவை போலீசார் என்கவுன்டரில் போட்டுத்தள்ளினர்.