எல்லா புகழும் இறைவனுக்கே !!!
Sathya !!!: 10/01/2010 - 11/01/2010 10/01/2010 - 11/01/2010 | Sathya !!!

என்னைப் பற்றி

எனது படம்
India
Hi I am sathyanarayanan,i like Read books and post a social & general news's , ,,,,,,

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

இதயத்தை பாதுகாக்கும் பழங்கள் ,,,,,,,,,,,,,

நண்பர்களே
                  இதயம் என்பது நமது உடலின் மிக  முக்கியமான ஒரு பகுதி  என்றால் மிகையாகது ,,,,,,,,,என் என்றால் இதன் முலம் தான் ரத்த ஓட்டம் என்ற ஒன்று நமது உடலில் பாய்கிறது இன்னு சொல்ல போனால் நாம் உயிர் வாழ்வதே இந்த இதயத்தால்  தான் ,,,,,,
சரி விஷயத்துக்கு வருவோம் இன்றைய அட்வான்ஸ் உலகில் நாம் இரு நோய் களுக்கு  உட்படுகிறோம் அதாவது   நிரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ,,,,,
ரத்த அழுத்தம் என்பது இதயத்தை பாதிப்பு ஏற்படுத்தி ரத்த சம்பந்தமா நோய்களை உருவாக்கும்  இந்த நோய் ஏற்பட்டால் சரிசெய்யவும் அல்லது வராமல் தடுக்கவும் ,,,,இயற்கை நமக்கு பழங்களையும் ,காய்கறிகளையும் தந்துள்ளது ,,,,,
இதயத்திற்கு பலன் தரும் பழங்கள் பல உள்ளன இந்தபழங்கள் நம் இதயத்தை சிர்செய்வதுடேன்  ஆரோக்கியமாக  வைக்கிறது  ,,,,
சும்மாவா சித்தர்களும் இந்த காலத்து ஆராச்சியாளர்களும் சொன்னார்கள் உணவில் காய்கறிகளும் மற்றும் பழங்களையும் அதிகம் உண்ணவேண்டும் என்று .........
ஆப்பிள் பழம் இதயத்திற்கு புத்துணர்வையும் ,உற்சாகத்தையும் தரும் ,,,,,,,,,
தினமும் ஒரு ஆப்பிள் சபிடுவந்தால்  நாம் டாக்டர் ய்  பார்க்க தேவை இல்லை என்கிறது பழமொழி,,,,,,,,,,
An apple a day ,keeps doctor away ,,,,,,,  இதில் இருந்தே தெரியும் ஆப்பிள் ன்  மருத்தவ குணம் பற்றி  ,,,
வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு உற்சாகத்தை தரும்
இதுபோல திராட்சை ,ஆரஞ்சு ,சிதாபழம்,அன்னாச்சி போன்றவை இதயத்தை பலபடுத்தும்   .மார்பில் வலியும் மறுத்து போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சை
பழ சாறு அருந்தலாம் .இது இதயவலி குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை பழ சாறுஅருந்துவது  நல்லது ,அது நோய் குணா படுத்தும் ,,,
நெல்லி கனி இதயத்திற்கு மிக அதிக பலனை தரும் ஏனென்றால் ஒரு நெல்லிக்கனி 4  ஆப்பிள்லுக்கு சமம் என்கிறனர்  விஞ்ஞானிகள் ,,, 
ஆரஞ்சு பழம் அதன் பழ சாறு மார்பு நோய் போன்றவற்றிக்கு  சிறந்த டானிக் எனவே இதனை  இதய நோய் சம்பந்தப்பட்டவர்கள் தினமும் அருந்தலாம் மிகவும் நல்லது .
ரத்ததை  சுத்தபடுத்த திராட்சை,பெரிச்சபழம் ,அத்தி பழம் போன்றவை உதவுகிறது இதயத்தை பாதுககிறது
உடலின் உப்பு அளவை குறைக்கவும் ,ரத்தம் சுத்தம் செய்யவும் கனிகளை உண்டு இதயத்தை பாதுகாப்போம் .......
வாழ்க இதய வளமுடன் .......

இந்திய அரசின் பயனுள்ள இனணயதளங்கள் !!!!

நண்பர்களே!
                           இந்திய அரசின் இணணயதளத்தை  இங்கு வரிசை படுத்திஉள்ளேன்  இது உங்களுக்கு உதவியாக இருக்கும் ,,,,,,என நம்புகிறேன்...
இனணயதளங்கள் பின்வருமாறு :

Obtain:

*   Birth Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=1>
*   Caste Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=4>
*   Tribe Certificate <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=8>
*   Domicile Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=5>
*   Driving Licence <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=6>
*   Marriage Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=3>
*   Death Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=2>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Apply for:

*   PAN Card <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=15>
*   TAN Card <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=3>
*   Ration Card <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=7>
*   Passport <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=2>
*   Inclusion of name in the Electoral Rolls <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=10>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Register:

*   Land/Property <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=9>
*   Vehicle <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=13>
*   With State Employment Exchange <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=12>
*   As Employer <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=17>
*   Company <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=19>
*   .IN Domain <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=18>
*  
GOV.IN Domain <http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=25>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Check/Track:

*   Waiting list status for Central Government Housing <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=9>
*   Status of Stolen Vehicles <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=1>
*   Land Records <
http://www.india. gov.in/landrecor ds/index. php>
*   Causelist of Indian Courts <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=7>
*   Court Judgements (JUDIS ) <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=24>
*   Daily Court Orders/Case Status <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=21>
*   Acts of Indian Parliament <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=13>
*   Exam Results <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=16>
*   Speed Post Status <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=10>
*   Agricultural Market Prices Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=6>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Book/File/Lodge:

*   Train Tickets Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=5>
*   Air Tickets Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=4>
*   Income Tax Returns <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=12>
*   Complaint with Central Vigilance Commission (CVC) <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=14>
·
        Search More - How do I <http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Contribute to:

*   Prime Minister's Relief Fund <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=11>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Others:

*   Send Letters Electronically <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=20>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Recently Added Online Services

*   Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2691>
*   Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2693>
*   Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2694>
*   Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2695>
*   Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2697>
*   Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2698>
*   Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2699>
*   Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2702>
*   Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2700>
*   Andhra Pradesh: Online Motor Driving School Information <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2705>  
Global Navigation

*   Citizens <
http://www.india. gov.in/citizen. php>
*   Business (External website that opens in a new window) <
http://business. gov.in/>
*   Overseas <
http://www.india. gov.in/overseas. php>
*   Government <
http://www.india. gov.in/govt. php>
*   Know India <
http://www.india. gov.in/knowindia .php>
*   Sectors <
http://www.india. gov.in/sector. php>
*   Directories <
http://www.india. gov.in/directori es.php>
*   Documents <
http://www.india. gov.in/documents .php>
*   Forms <
http://www.india. gov.in/forms/ forms.php>
*   Acts <
http://www.india. gov.in/govt/ acts.php>
*   Rules <
http://www.india. gov.in/govt/ rules.php>
*   Schemes <
http://www.india. gov.in/govt/ schemes.php>
*   Tenders <
http://www.india. gov.in/tenders. php>
*   Home <
http://www.india. gov.in/default. php>
*   About the Portal <
http://www.india. gov.in/aboutthep ortal.php>
*   Site Map <
http://www.india. gov.in/sitemap. php>
*   Link to Us <
http://www.india. gov.in/linktous. php>
*   Suggest to a Friend <
http://www.india. gov.in/suggest/ suggest.php>
*   Help <
http://www.india. gov.in/help. php>
*   Terms of Use <
http://www.india. gov.in/termscond tions.php>
*   Feedback <
http://www.india. gov.in/feedback. php>
*   Contact Us <
http://www.india. gov.in/contactus .php>
*   Accessibility Statement <
http://www.india. gov.in/accessibi litystatement. php>


வியாழன், 28 அக்டோபர், 2010

காதலுக்கும் இதயத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை !!!

காதலில் விழுந்தவர்கள் என்னோடைய இதயத்தை அவளிடம் தொலைத்துவிட்டேன் என்றும் ,காதலர்கள் மற்றும் காதலிகள் என் இதயத்தை திருடியதாகவும் கதை சொல்வார்கள் ,,,,,,,,,,,,
இன்னும் சொல்லப்போனால் காதலின் வடிவமே இதயம் தானே ஆனால் விஞ்ஞானிகள் காதலுக்கும், இதயத்திற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று கூறி உள்ளனர் , அவர்கள் கூறியது  
காதல் என்பது முழுக்க முழுக்க மூளை சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என கண்டறிந்து சொல்லியுள்ளனர் விஞ்ஞானிகள்.அதுமட்டும் இல்லமல் அவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்காவின் சிராகஸ் பல்கலைக் கழகத்த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீஃபன்,  காதலில் விழுவதினால் கோகைன் போதை பொருளில் கிடைக்கும் அதே கிளர்ச்சி கிடைப்பதோடு மட்டுமல்லாது, மூளையின் அறிவார்ந்த பகுதியும் தூண்டப்படுகிறது  என்கிறார்.
காதலித்தால் புத்திசாலி ஆகலாம் என்கிறார் இவர் ,
ஆனால்  ஒரு சாரார் காதலிப்தே முட்டாள்தனமானது என்கின்றனர் .....
இன்னும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒருவர் அல்லது ஒருத்தி காதலித்தால் அவர்களது மூளையின் 12 பகுதிகள் சுழற்சியாக சுற்றி வந்து கோகைனுக்கு ஈடான கிளர்ச்சியை ஏற்படுத்த வைக்கும் டோபாமைன், ஆக்ஸிடாசின் போன்ற இரசாயனங்களை சுரக்க வைக்கிறதாம்,காதல் உணர்வு பொங்கி வழிகையில், மூளையில் உடல் உருவகம் போன்ற புதுமையான செயல்பாடுகளும் தூண்டப்படுகிறதாம். சில சமயங்களில் நாம் இதயத்தின் வெளிப்பாடாக உணருவதும், மூளையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்" என்கிறார் ,உண்மை இவ்வாறு இருக்க காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா?    மூளைதானே.... என்று கேட்கிறார்  .

செவ்வாய், 26 அக்டோபர், 2010

கிரெடிட் & டெபிட் கார்டைபயன்படுத்த அடையாள அட்டை

இந்தியாவில் 5 கோடி கிரெடிட் கார்டுகளும், 30 கோடி டெபிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2 ஆயிரம் மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பொருள்களவாங்கி விட்டு அதற்கான பணத்தை கிரெடிட் கார்டு முலமும் டெபிட் கார்டு மூலம் செலுத்துவதற்கு, புகைப்படத்துடன் அடையாள அட்டை அவசியம் என வங்கிகள்  கூறி உள்ளன .

மக்களவையில்  கிரெடிட் கார்டு மோசடி பிரச்னை சென்ற பிப்ரவரி  எழுந்தது. 2008 ஏப்ரலி இருந்து  டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 8 ஆயிரம் மோசடி சம்பவம் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கிக்கு   ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தெரிவிதிருந்தது .....
பொருள்கள் வாங்கும் வர்த்தக நிறுவனங்களில் பான் கார்ட மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற புகைப்படத்துடன் அடையாள அட்டை கேட்கப்படலாம் என  ஐசிஐசிஐ வங்கி, அதன் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஹெச்.எஸ்.பி.சி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், சிட்டி வங்கி, ஸ்டாண்டர்டசார்ட்டர்ட் வங்கி, டாயிஷ் வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலம்  கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என மக்களவையில் அறிவித்தது ,,,,,

இந்த மோசடியைத் தடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கோருதல், கார்டு தொலைந்தால் பணம் எடுப்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கை  என்ன பல ஆலோசனைககள் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

புற்றுநோய் மஞ்சள் நல்ல மருந்து !!!!

புற்றுநோய் பல நாடுகளில் உள்ளது என்றாலும் பல மருத்துவம் வந்துள்ளது அதில் இதுவும் ஒன்று  மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் குர்குமின் மாத்திரை கேன்சர் நோயாளிகளுக்கு நல்லது என்று ஆராய்ச்சி சொல்கிறது ,,,,,,,,
புற்றுநோய் மருத்துவர் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களும் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கேன்சர் நோய்க்கு மஞ்சள் சார்ந்த பொருட்களின் பயன்பாடு பற்றி தீவிர ஆராய்ச்சி செய்கின்றனர் , பெங்களூரு மஜும்தார் ஷா கேன்சர் சென்டரின் பயோ-டெக்னாலஜி துறை மருத்துவர்கள், வாய்ப்புற கேன்சர் நோயாளிகளுக்கு, "குர்குமின்' மாத்திரையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த ஆய்வு விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. வாய்ப்புற கேன்சர் உள்ள நோயாளிகள் 220 பேர், ஆய்வில் கலந்து கொண்டனர்.அனைவருக்கும், மஞ்சள் கிழங்கில் இருந்து உருவாக்கப்பட்ட , "குர்குமின்' மாத்திரை (1.2 கிராம்), பல வேளைகளில் சிகிச்சை காலம் முழுவதும் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே பலபேருக்கு   முன்னேற்றங்கள் இருந்தாலும், சிகிச்சை தொடர்ந்து நடந்தது.முதலில் வெறும் மஞ்சளை குழைத்து நோயாளிகள் வாயில் தடவப்பட்டது. இதற்கு நல்ல பலன் , பற்களில் கரை  ஏற்பட்டு பெரும் பிரச்னை ஆகி  பின், குர்குமின் மாத்திரை கொடுக்கப்பட்டது.

இதுகுறித்த முழுமையான விவரங்கள் டிசம்பர் மாதத்தில் தான் தெரிய வரும், என ஆராய்ச்சித் தலைவர் மோனி ஆபிரகாம் தெரிவித்தார்,குர்குமின்,மாத்திரையின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்த பிரிட்டன் விஞ்ஞானிகளும், கேன்சர் செல்களை அழிப்பதில்,குர்குமின்' மாத்திரை தீவிரமாக செயலாற்றுவதாகக் கூறியுள்ளனர்.தற்போது, அமெரிக்க மற்றும் ஜப்பான் நாட்டு மக்களும், "குர்குமின்' மாத்திரைகளை, பாலில் கலந்து உட்கொள்கின்றனர். இந்தியாவில் அதிக ஆய்வுகள் நடந்ததில்லை என்றாலும், ஆய்வுகளின் முன்னேற்றம் காரணமாக, "குர்குமின்' மாத்திரைகள் கேன்சர் நோய்க்கு பரிந்துரைக்கப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.அரை டீ ஸ்பூன் அளவு சாதாரண மஞ்சள் தூளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்தால், கேன்சர் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர் ,,,,,,,

திங்கள், 25 அக்டோபர், 2010

மழைக்குப் பயந்து கூடு நோக்கி பாயும் பறவைபோல் இறாதே!!

நண்பர்களே !!
நான் படித்ததில் பிடித்தது இந்த கட்டுரை இது என் மெயில் வந்ததை உங்களுடன் பகிர்கிறேன் (நன்றி - என்.கணேசன் அவர்களுக்கு )
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பு வரை வந்து நிற்கின்றது..
அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது. அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது. குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது. இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது.
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.
தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன் என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை.
அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. ”நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.
அதற்காக நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும். இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.
வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல. கஷ்டங்களை எப்படி எதிர்கொள்வது, எப்படி அதிலிருந்து மீள்வது என்று கற்றுக் கொள்வது தான் அந்தக் கஷ்டங்களை வெற்றி கொள்ளும் வழி.

கஷ்டங்களே தெரியாமல் என் பிள்ளையை வளர்த்துவேன் என்று சொல்வது வாழ்க்கையே என்னவென்று தெரியாமல் என் பிள்ளையை வளர்த்துவேன் என்று சொல்வதற்கு சமம். பெற்றோர் பிள்ளைகளுக்கு வழி காட்டலாம். ஆனால் வழிநெடுகக் கூடப் போய் அவர்களைப் பலவீனர்களாக்கி விடக்கூடாது. எப்போதுமே அடுத்தவர்களைச் சார்ந்தே இருக்கிறவர்களாக இருத்தி விடக்கூடாது.
பெற்றோர்களே! நீங்களும் இந்தத் தவறைச் செய்கிறீர்களா என்பதை யோசித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் அவரவர் கால்களில் நிற்கும் காலம் வந்த பின்பும் தாங்கிக் கொண்டு இருக்கிறீர்களா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியிருந்தால் தாய்க்கழுகைப் போல உங்கள் பிள்ளைகளைத் தள்ளி விடுவது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி.
இளைஞர்களே! பெற்றவர்களுடைய தயவிலோ, மற்றவர்களுடைய தயவிலோ சொகுசான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா என்பதை நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். அப்படி இருந்தால் உடனடியாக அந்தச் சிறையிலிருந்து தப்பித்து விடுவது நல்லது. வாழ்வில் சுதந்திரமும், வலிமையும், அர்த்தமும் பெற சிறகை விரித்துப் புறப்படுங்கள். உங்களால் சமாளிக்க முடியுமா என்று சந்தேகம் கொள்ளாதீர்கள். பலவீனர்களாக இருக்க இயற்கை உங்களைப் படைக்கவில்லை. எனவே நீங்கள் சமர்த்தர்களாகவும், வலிமை உடையவர்களாகவும் இருக்கச் செய்யும் எல்லா முயற்சிகளிலும் இயற்கை உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்

Click Ads,,,