காதலில் விழுந்தவர்கள் என்னோடைய இதயத்தை அவளிடம் தொலைத்துவிட்டேன் என்றும் ,காதலர்கள் மற்றும் காதலிகள் என் இதயத்தை திருடியதாகவும் கதை சொல்வார்கள் ,,,,,,,,,,,,
இன்னும் சொல்லப்போனால் காதலின் வடிவமே இதயம் தானே ஆனால் விஞ்ஞானிகள் காதலுக்கும், இதயத்திற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று கூறி உள்ளனர் , அவர்கள் கூறியது
காதல் என்பது முழுக்க முழுக்க மூளை சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என கண்டறிந்து சொல்லியுள்ளனர் விஞ்ஞானிகள்.அதுமட்டும் இல்லமல் அவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்காவின் சிராகஸ் பல்கலைக் கழகத்த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீஃபன், காதலில் விழுவதினால் கோகைன் போதை பொருளில் கிடைக்கும் அதே கிளர்ச்சி கிடைப்பதோடு மட்டுமல்லாது, மூளையின் அறிவார்ந்த பகுதியும் தூண்டப்படுகிறது என்கிறார்.
காதலித்தால் புத்திசாலி ஆகலாம் என்கிறார் இவர் ,
ஆனால் ஒரு சாரார் காதலிப்தே முட்டாள்தனமானது என்கின்றனர் .....
இன்னும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒருவர் அல்லது ஒருத்தி காதலித்தால் அவர்களது மூளையின் 12 பகுதிகள் சுழற்சியாக சுற்றி வந்து கோகைனுக்கு ஈடான கிளர்ச்சியை ஏற்படுத்த வைக்கும் டோபாமைன், ஆக்ஸிடாசின் போன்ற இரசாயனங்களை சுரக்க வைக்கிறதாம்,காதல் உணர்வு பொங்கி வழிகையில், மூளையில் உடல் உருவகம் போன்ற புதுமையான செயல்பாடுகளும் தூண்டப்படுகிறதாம். சில சமயங்களில் நாம் இதயத்தின் வெளிப்பாடாக உணருவதும், மூளையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்" என்கிறார் ,உண்மை இவ்வாறு இருக்க காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா? மூளைதானே.... என்று கேட்கிறார் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக