இன்றுமுதன்ல் சத்திய என்கிற நான் புதிய ப்ளாக் ய் உருவாக்கி உள்ளேன் இந்த பதிவை நான் முதல் முறையாக உருவாகியதால் என் ப்ளாக் ல் தவறு எதாவது இருந்தால் மன்னிக்கு வேண்டுகிறேன்
மேலும் இன்று புதிய செய்திய குமுதம் இதழில் இருந்தி லிங்க் செய்துளேன்
நன்றி குமுதம் ,,,,,,,
டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இன்று மேலும் இரண்டு பதக்கங்களை கைப்பற்றியது.
காமன்வெல்த் போட்டியின் பத்தாம் நாளான இன்று மகளிர் துப்பாக்கி சுடுதல் பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் சமரேஷ் ஜங்கிற்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 91ஆக உயர்ந்தது. இதேபோல் இன்று நடைபெற்ற ஆண்கள் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் முதல் நிலை இணை 4-1 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து இணையை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியின் இறுதி நாளான நாளை மிகப்பிரம்மாண்டமான நிறைவு விழா நடைபெறவுள்ளது. ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெவுள்ள இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக