எல்லா புகழும் இறைவனுக்கே !!!
Sathya !!! Sathya !!!

என்னைப் பற்றி

எனது படம்
India
Hi I am sathyanarayanan,i like Read books and post a social & general news's , ,,,,,,

செவ்வாய், 7 டிசம்பர், 2010

செல்போன் கதிர்வீச்சு சிகரெட் புகைக்கு சம்மம்,,,,,,,,,,

இன்றைய உலகில் செல்போன் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய பொருளாக உள்ளது என்றால் மிகை ஆகாது,அப்படிப்பட்ட  செல்போன் நீறை மற்றும் குறை பற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன ,,,,,,,,இப்போது ஒரு ஆய்வு சில அதிர்ச்சி தகவலை நமக்கு தருகிறது  ,,,,,,,,,தகவல் பின்வருமாறு :
சிகரெட் புகைக்கு  ஈடானது செல்போன் கதிர்வீச்சு என்று சமீபத்தில் நடத்தப்பட்ட  ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். மக்களின் வசதிக்காக அனைத்து செல்போன் நிறுவனங்களும் சிக்னல் தெளிவாக கிடைக்கச் செய்வதற்காக மனிதர்கள் நெருக்கமாக வசிக்கும் உயரமான கட்டடங்களின் மேற்பகுதியில் டவரை நிறுவி வருகின்றன. இந்த டவரில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளையும் எந்த அளவிற்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. என்பது குறித்து டிராய் அமைப்பு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பேராசிரியர் கிரிஷ்குமார் என்பவர் தலைமையில் ஆய்வை மேற்கொண்டது. ஆய்வில் மனிதர்கள் தங்களை அறியாமலேயே ஸ்லோ பாய்சனை ஏற்றுக்கொள்கின்றனர். அதாவது சிகரெட் குடிப்பதால் உண்டாகும் விளைவு செல்போன் கதிர்வீச்சில் உண்டாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கதிர்வீச்சு குறைந்த டவர்களை அமைத்து வருவதை போன்று இந்தியாவிலும் தனியார் நிறுவனங்கள் அதனை பின்பற்ற வேண்டும் என கூறினார்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

மொபைல் நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறும் புதிய வசதியை அறிமுகம் !!!

மொபைல் போன் வாடிக்கையாளர்கள் நம்பரை மாற்றாமல், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது,,,,,,,
மொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கைக்கு தக்க வகையில், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருகையும் கணிசமாக உயர்ந்து விட்டது. இதனால், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலும்  புதுப்புது சேவைகளை, சலுகைகளை அறிவித்து வருகின்றது  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அதிக சேவை மற்றும் சலுகை வழங்கும் நிறுவனத்திற்கு தாவி விடுகின்றனர். அப்படி தாவும் போது, மொபைல் போன் நம்பரை அடிக்கடி மாற்றும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இதைமொபைல் போன் வாடிக்கையாளர்கள் நம்பரை மாற்றாமல், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. இரண்டு ஆண்டு இழுபறிக்கு பின், இந்த புதிய வசதியை அரியானாவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் நேற்று துவக்கி வைத்தார். இந்த வசதி விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஒரே நம்பர் ல் வேறு நெட்வொர்க் மாற்றலாம் ,,,,,,,,,,,,,

சனி, 20 நவம்பர், 2010

இந்தியா வரலாறு காணாத 2ஜி உழல் !!!!!!!!!!

இந்தியாவில் லஞ்சம் நாளுக்கு நாள் வளருதே தவிர குறையார மாதிரி தெரியல .....
என்ன இப்போ வரலாறு  காணாத உழல்அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரம் பற்றி  செய்திதாளில் வந்தவண்ணம் உள்ளது நான்  படித்ததை இந்தபதிவின் முலம் உங்களுடன் பகிர்கிறேன்,,,,,

ஓனே  இந்திய (oneindia):
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்தியா இதுவரை காணாத பெரும் தொகை இழக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களைத் திருப்திப்படுத்த தேசத்துக்கு நஷ்டம் விளைவிக்கும் அளவுக்கு துணிந்திருக்கிறார்கள் அதிகாரத்திலுள்ளோர். 'வெள்ளையர் காலத்திலும் நடந்திராத கொள்ளையாக அல்லவா இருக்கிறது' என நடுநிலையாளர்கள் மனம் கொதித்துப் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 ஜி விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்டும் வகையில், குறைவான தொகைக்கு உரிமம் பெற்ற அத்தனை நிறுவனங்களிடமும், இன்றைய மார்க்கெட் ரேட்டை வசூலிக்க அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

ஒரு வேளை இது நடந்தால், பலரும் கவனிக்காமல் விட்ட ஒரு கேள்வி விசுவரூபம் எடுக்கும்.

அது... இந்த 2 ஜி உரிமத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கொடுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்!

அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி லஞ்சப் பணம்!!

இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் எப்படி திருப்பி வசூலிக்கப் போகின்றன? துறைக்குப் பொறுப்பானவர்கள், ஒதுக்கீடு செய்தவர்களின் சட்டையைப் பிடித்து திரும்ப எடுத்து வையுங்கள் அந்தப் பணத்தை என்று கூற முடியுமா...

இதனை எப்படி வெளிக் கொண்டுவர முடியும்? என்ற கேள்வி எழலாம். அரசு மனது வைத்து நேர்மையான விசாரணையை மேற்கொண்டால், வெளிக்கொணர முடியும். ஒரு வகையில் இந்தப் பணம் மொத்தமும் கணக்கில் வராத கறுப்புப் பணம். நியாயமாக அரசுக்கு சேர வேண்டிய பணம். அதை எப்போது அரசு கையகப்படுத்தப் போகிறது?

விசாரணை என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி, இந்த லஞ்சப் பண விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், இந்தத் தனியார் நிறுவனங்கள் திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வாய் மூடி மவுனம் சாதித்து, பொருத்தமான தருணத்தில் மீண்டும் காரியம் சாதித்துக் கொள்ளப் போகும் அபாயமும் இதில் உள்ளது!

எனவே இந்த ஊழல் முன்னிலும் பல மடங்கு அதிகமாக நடக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தவறு செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதோடு, இந்த தவறைச் செய்ய கைமாறிய பெரும் தொகையைக் கண்டுபிடித்து வெளிக் கொணர்வதும் அவசியம். 

தினமலர் (dinamalar) :
             அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக
ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாக வெடித்து, அதையொட்டி பல்வேறு பிரச்னைகள் கிளைவிடத்துவங்கியுள்ளன. ஆனால், இந்த விவகாரம் துவங்கியதில் இருந்து, பார்லிமென்டை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரின் பணிகள் அனைத்துமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது. ராஜா ராஜினாமாவை அடுத்து, கூட்டுக் குழு விசாரணை தேவை என்று கூறி, எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த முட்டுக்கட்டையை நீக்கவும், சுமுகமான முறையில் பார்லிமென்டை நடத்துவதற்காகவும், எதிர்க்கட்சிகளுடன் அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். நேற்று காலை பார்லிமென்ட் கூடியதும் இரு அவைகளும் சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. எங்களுக்கு தேவை, ஜெ.பி.சி., தான் என்று அந்த ஒரு வார்த்தையை முழங்கி வருகின்றனர். பதிலுக்கு மத்திய அரசோ, முதலில் "பிஏசி' அப்புறம் பார்ப்போம் என்கிறது. இப்படி விட்டேனா பார் என இருதரப்பும் இருப்பதால் ஆறு நாளாக பார்லிமென்ட் முடங்கிவிட்டது.

எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தை உணர்ந்த அரசு தரப்பு, அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்," பார்லிமென்டின் கூட்டுக்குழுவை அமைக்க தயார், அப்படி அமைக்கும் பட்சத்தில் 1998ம் ஆண்டிலிருந்தே விசாரணையை நடத்த வேண்டும், சம்மதமா' என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு, காரணம் ஏலம் விடுவதை தவிர்த்து விட்டு, வருமான பங்கீட்டு அடிப்படை முறையை அறிமுகப்படுத்தியதே பா.ஜ.,தான் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காகவே அப்போதைய அமைச்சர் ஜக்மோகனை பதவியில் இருந்து விலகச் செய்ததும் பா.ஜ.,தான் என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. இதனால், பார்லி., கூட்டுக்குழு அமைப்பது குறித்து இரு தரப்புக்கும் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இதற்கிடையில், வரும் திங்கள் அல்லது செவ்வாய் அன்று சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரும்போது, நீதிபதிகள் ஏதேனும் கருத்துக்கள் தெரிவித்தால், எதிர்க்கட்சிகளின் குரல் மீண்டும் வலுவாக கிளம்பவும் வாய்ப்புள்ளது. இருதரப்புக்கும் இடையில் விடை தெரியாத புதிர் போல் நீண்டு கொண்டு போனால், பார்லி.,யின் குளிர்கால கூட்டத்தொடர் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில், நேற்று நிருபர்களை சந்தித்த அமைச்சர்கள் நாராயணசாமியும், ஷிண்டேயும், பார்லி., நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து நீடித்து வரும்  முட்டுக்கட்டைக்கு வரும் திங்கட்கிழமைக்குள் ஒரு முடிவு தெரிந்து விடும், என்று தெரிவித்தனர்.
 இன்று தினமணி யில் :
2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில், தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள் என்றார் பிரதமர். பாராளுமன்றம் கடந்த ஆறு நாட்களாக செயல்படாமல் முடங்கிய நிலையில், தனது நீண்ட நாள் மவுனத்தைக் கலைத்துவிட்டு, இன்று அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் வழக்கம்போல் சுமுகமாக இயங்குவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், எந்த விவகாரத்தையும் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், எதற்கும் பயப்படவில்லை என்றும் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார். கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பாராளுமன்றமும் நாடும் கொந்தளிப்பான சூழ்நிலையில் இருக்கும் நிலையில், முதல் முறையாக பிரதமர் மன்மோகன் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தவறாக நடந்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் நீதிக்கு முன் நிறுத்தப் படுவார்கள். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உழல் எங்குபோய் முடியுமுன்னு யாருக்கு  தெரியும் மொத்தத்தில் உழல் என்று ஒழியுமோ அன்றுதான் இந்தியா வல்லரசு  ஆகும்  ,,,,,,,,,,,

ஞாயிறு, 14 நவம்பர், 2010

குழந்தைகள் தினம் எப்படி வந்தது குழந்தைககளின் இன்றைய நிலை !!!!

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.
உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் நாளை கொண்டாடுகின்றன.
ஆனால் இன்றைய குழந்தைகள் நிலை :
1) குழந்தைகள் தொழிலாளர்களாக தொடர்ந்து, நீடித்தப் பணியில் குழந்தைகள் தொழிலாளர் ஈடுபடுவதைக் குறிக்கிறது. எல்லா நாடுகளிலும் சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பெரிய சர்வதேச நிறுவனங்களில் கூட இக்கொடுமை நடைபெறுகிறது. கஹதோதக் குழந்தைத் தொழிலாளர் பணியமர்த்தப்படுவது வரலாற்றுக் காலத்தில் கூறப்பட்டாலும், உலகளாவிய கல்வி முறை , தொழில்துறையில் ஏற்பட்ட வேலை மாற்றம், வேலையலர்களுகும் ,குழந்தைகளின் உரிமைகளுக்கும்  இடையே ஏற்பட்ட கருத்துக்களால் குழந்தைத் தொழிலாளர் முறை தற்போது உலகெங்கும் பரவியுள்ளது.

வளர்ச்சியடைந்த பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளரின் வயது மாறுபட்டதாக உள்ளது. பள்ளி வேலை மற்றும் வீட்டு வேலை தவிர பிற வேலைகளுக்கு குழந்தைகள் பணியமர்த்தக்கூடாதென வளர்ச்சியடைந்த நாடுகள் கூறுகின்றன. குறிப்பிட்ட வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கண்டிப்பாக பணியமர்த்தக்கூடாது. இந்த குழந்தை  தொழிலாளர் வயது வித்தியாசமும் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதுடன், பெற்றோரின் சம்மதமில்லாமல் வேலைக்கு அனுமதிக்கக்கூடாது என்பதாகும்.
2) குழந்தை கொலைகள்  :
மும்பாயில் தன் குழந்தை ஆஸ்பத்திரி மாடியில் இருந்து கிழ் போட அருமை  தாய்  ....
கோவையில் ஒருவன் இரு குழந்தைகளை கடத்தி கொன்றான் ( கிடைத்து அவனுக்கு  ஆப்பு  ),,,,,
படித்த இரு பட்டதாரிகள்  பணத்திற்காக குழந்தை கடத்தி உள்ளனர் ,,,,, 
இன்றும் இந்தியாவில் குழந்தை கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கு ....
இதுபோன்று பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளது இதற்கு என்ன தான் தீர்வு  ,,,,,,,,,,,, 
நான் தினமலர் படித்ததை இந்த பதிவுடன் பகிர்கிறேன் (நன்றி தினமலர்)செய்தி பின்வருமாறு :
                     குழந்தைகள் கொலை: எப்படி தண்டனை கொடுக்கலாம் ? 

கோவை : "பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொலை செய்த டிரைவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்; அதற்கேற்ப இவ்வழக்கில் ஆஜராக சிறப்பு வக்கீல் நியமிக்கப்பட வேண்டும்' என கோவை வக்கீல்கள். கருத்து தெரிவித்துள்ளனர், குழந்தை கடத்தலில் ஈடுடும் குற்றவாளிகளை என்ன செய்ய வேண்டும் எப்படி தண்டனை வழங்க வேண்டும் என கருத்துக்கள் கேட்டு இன்று காலையில் தினமலரில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் குற்றவாளி மோகன்ராஜூவை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது மக்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. குற்றம் புரிந்தவர்கள் மீது எப்படி நடவடிக்கை இருக்கலாம் என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:

கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்; துணிக்கடை உரிமையாளர். கடந்த 29ம் தேதியன்று காலை, பள்ளி வேனுக்காக காத்திருந்த இவரது மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் வேனில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கால் டாக்சி டிரைவர் மோகன் ராஜூ, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த இவனது கூட்டாளி டிராக்டர் டிரைவர் மனோகரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இச்சூழலில், பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொலை செய்த கொடூர குற்றவாளிகளை விசாரணை இன்றி, பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இது பற்றி கோவை வக்கீல்கள் சிலர் கூறிய கருத்துகள்:

வக்கீல் ராஜேந்திரன்: குழந்தைகள் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளிக்கு சொந்தமான பஸ்களில் அழைத்துச் செல்ல வேண்டும். முடிந்தவரை வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும்.பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேன், ஆட்டோ டிரைவர்களின் போட்டோவை பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசார் பெற வேண்டும். டிரைவர்கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.கோவையில் இரு குழந்தைகளை கடத்தி, கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை தனி கோர்ட்டில் விசாரிக்க வேண்டும். இதற்காக சிறப்பு அரசு வக்கீல் நியமிக்கப்பட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து, உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும். தனி கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றாலும், அங்கும் விரைந்து உறுதி செய்யப்பட வேண்டும்.

வக்கீல் கலைச்செல்வி: குழந்தை கடத்தல், கொலை சம்பவம் வன்மையாக கண்டிக்க வேண்டிய செயல். இச்சம்பவம் பற்றிய வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபட நினைப்போர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கடுமையான மரண தண்டனை விதிக்க வேண்டும். குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர் மறக்க முடியாத அளவுக்கு தண்டனை வழங்க, தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்.

வக்கீல் ஆனந்தன்: இச்சம்பம் பற்றி விசாரிக்கும் போலீசார், அனைத்து சாட்சிகளையும் உறுதியாக சேர்க்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது, எவ்வித தவறும் நடந்து விடக்கூடாது. வழக்கில் ஆஜராக சிறப்பு அரசு வக்கீல் நியமிக்கப்பட வேண்டும். வழக்கை நாள்தோறும் விசாரிக்கும் வகையில் தனி கோர்ட் அமைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். இவர்களுக்கு கிடைக்கும் தண்டனை, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இடையே தொடர்பு இருக்க வேண்டும். மாணவ, மாணவியரின் குடும்ப போட்டோ டிரைவர்களிடமும், டிரைவர்களின் போட்டோ பெற்றோர் மற்றும் குழந்தைகளிடமும் இருக்க வேண்டியது அவசியம்.

வக்கீல் தேன்மொழி: பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இச்சட்டத்தில் கடும் தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். கோவையில் நடந்த கொடூர சம்பவத்தில் நேரடி சாட்சியம் இல்லாத காரணத்தால், குற்றவாளிகள் இருவரிடம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டும். இதை வைத்தே அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வழக்கை மிக முக்கியமான வழக்காகக் கருதி, சிறப்பு நீதிமன்றத்தில் விரைந்து விசாரிக்க வேண்டும். ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்களில் மேல்முறையீடு செய்தாலும், கீழ் கோர்ட் விதிக்கும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும். அந்தளவுக்கு வழக்கின் குற்றப் பத்திரிகை நிச்சயிக்கப்பட வேண்டும்.

ஆனால் இதற்கி‌டையில் அன்று காலையில் குற்றவாளி மோகனராஜூவை போலீசார் என்கவுன்டரில் போட்டுத்தள்ளினர்.

  

Click Ads,,,